யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமான இஞ்சி அறுவடை!

விவசாய செய்கை மூலம் சிறந்த விவசாய பெருமகனாக ஜனாதிபதி விருது பெற்ற சேனாதிராஜா பிறேமகுமார், அளவெட்டியிவுள்ள தனது விவசாயநிலத்தில் வெற்றிகரமாக இஞ்சி செய்கையை மேற்கொண்டுள்ளார்.

சேனாதிராஜா பிறேமகுமாரின் விளை நிலப்பகுதிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இரமாநாதன் இன்று (9) விஜயம் செய்திருந்ததோடு, யாழ் மாவட்டத்தில் முதலாவதாகவும் வெற்றிகரமாகவும் செய்கை பண்ணப்பட்ட இஞ்சி அறுவடையையும் வைபவ ரீதியாக அறுவடை செய்து வைத்துள்ளார்.

மூன்றாவது தலைமுறையாகவும் விவசாயத்தை மேற்கொண்டு வருவதோடு 9 ஏக்கரில் மேட்டு பயிர் செய்கையும், 2 ஏக்கரில் வயல் செய்கையினையும் மேற்கொண்டு வருகிறார்கள். பல்வேறு விவசாய விருதுகளுக்கும் சொந்தக்காறராகவும் பிறேமகுமார் அவர்கள் விளங்குகிறார்.

TOM EJC இன மாமர விளை நிலப்பரப்பில், ஊடு பயிர் செய்கையாக இஞ்சி செய்கையை மேற்கொண்டுள்ளார். 15KG விதை இஞ்சியை நடுகை செய்து ,1200KG விளைதிறனாக அறுவடையும் செய்துள்ளார். உற்பத்தி செலவாக 90000 ஆயிரம் ரூபாவினை செலவு செய்துள்ளார். 1KG- 350 ரூபா வீதம்,விற்பனைக்கான சந்தை வாய்ப்பாகவும் பெறுகிறார்.

இரண்டு நிரந்தர பணியாளர்கள் மூலமும், தமது குடும்பத்தின் கடின உழைப்பின் மூலமும் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளார். மேலதிக தேவைகளின் போது விவசாய பணியாளர்களையும் பெற்று கொள்வார்.

தனியார் நிறுவனம் ஒன்று தமது உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்து வருவதாகவும், அவர்களின் தேவைக்கேற்ப உற்பத்திகளை தாம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். விவசாய போதனாசிரியர்களின் ஆலோசனையும், தமது பரம்பரையான அனுபவங்களை கொண்டும் விவசாயத்தை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

சுண்டங்கத்தரி, கெக்கரி, கோவா, பிசுக்கு ஆகியவற்றின் மூலம் சிறந்த ஆதாயத்தையும் பெறுகிறார். தூவல் நீர்ப்பாசன முறைமையை பயன்படுத்துகிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here