களை கட்டியது ஆர்யா- சாயிஷா திருமணம்!

நடிகர் ஆர்யா – சாயிஷா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நாளைதான் திருமணம் என்றபோதும், நேற்றே கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டன.

நடிகர் ஆர்யா – சாயிஷா கஜினிகாந்த் படத்தில் நடித்த போது சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து இருவரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து இருவர் தரப்பிலும் விளக்கம் அளிக்காத நிலையில் கடந்த மாதம் காதலர் தினத்தன்று நடிகர் ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் சாயிஷாவுக்கும் தனக்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்தார். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இவர்களது திருமணக் கொண்டாட்டங்கள் நேற்றே ஆரம்பமாகி விட்டது. ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்ற சங்கீத நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்படப் பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இன்று மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாளை திருமணம் நடைபெறுகிறது. இதில் தமிழ்த் திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

முன்னதாக நடிகர் ஆர்யா விஷால் ,அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு நேரில் சென்று தனது திருமண அழைப்பிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here