வடக்கு சுகாதார அமைச்சர் நிதி மோசடி… முதலமைச்சரின் உத்தரவையடுத்து திருப்பி செலுத்துகிறார்!

வடமாகாண சுகாதார அமைச்சர் ஜி.குணசீலனின் நிதி துஷ்பிரயோக நடவடிக்கை தொடர்பான தகவலொன்றை தமிழ் பக்கம் வெளிச்சமிடுகிறது. தனது தனிப்பட்ட ஆளணிக்கான சம்பளத்தின் ஒரு பகுதியை குணசீலன் தானே பெற்றுக்கொண்டுள்ளார். அந்த ஆளணியினருடன் கூட்டு வங்கி கணக்கு (joint account) வைத்து அந்த பணத்தை பெற்றுள்ளார்.

மாகாண அமைச்சரின் தனிப்பட்ட ஆளணி நியமனத்திற்காக குறிப்பிட்டவானவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அனேகமாகவர்கள் தமது மனைவி, மச்சான், உறவினர்களிற்குத்தான் இந்த நியமனங்களை வழங்குவார்கள். எனினும், அவர்களிற்குரிய மாதாந்த சம்பளம் அவர்களின் வங்கி கணக்கின் ஊடாக வழங்கப்பட்டு விட வேண்டும்.

சில அமைச்சர்கள்- குறிக்கப்பட்ட ஆளணியைவிட அதிக ஆளணியை வைத்திருப்பார்கள். எனினும், நியமிக்கப்பட்ட சில ஆளணியினரின் ஊதியத்தில் குறைப்பு செய்து- எனினும் அந்த பணத்தை அமைச்சரோ, நிர்வாகமோ வெட்டியெடுக்க முடியாது. அந்த உத்தியோகத்தரே மேலதிக பணத்தை வழங்கலாம்- இன்னொருவரையும் பணிக்கமர்த்துவதுண்டு.

ஆனால் வடக்கு சுகாதார அமைச்சர் இந்த நடைமுறைகளை கணக்கில் எடுக்காமல், தனது தனிப்பட்ட ஆளணியினருடன் தனக்கு கூட்டு வங்கி கணக்கு வைத்து, அவர்களிற்கு குறிப்பிட்ட தொகை பணத்தை வழங்கி எஞ்சிய பணத்தை தானே பெற்றுள்ளார்.

இது விதிமீறல். ஊழல் வகைக்குள்ளும் அடங்கலாம்.

இந்த நடவடிக்கையை சுகாதார அமைச்சின் செயலாளர் அவதானித்து, முதலமைச்சரிடம் முறையிட்டதையடுத்து, முதலமைச்சர் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். சுகாதார அமைச்சரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். இதன்போது “நான் சட்டத்திற்குட்பட்ட விதத்திலேயே செயற்பட்டேன்“ என சுகாதார அமைச்சர் விளக்கமளித்துள்ளார். எனினும், அது சட்டமீறல் என்பதை புரிய வைத்த முதலமைச்சர், கூட்டு வங்கி கணக்கின் மூலம் பெற்ற பணத்தை, சம்பந்தப்பட்டவர்களிடமே வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, பணத்தை திருப்பிக்கொடுக்கும் நடவடிக்கையில் சுகாதார அமைச்சர் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here