அமெரிக்க கடற்படையை திருகோணமலையிலிருந்து விரட்டிய ஆசாமி!

அமெரிக்காவின் மிதக்கும் வைத்தியசாலையான பிரமாண்ட கப்பலொன்று அண்மையில் திருகோணமலைக்கு வந்ததை அறிந்திருப்பீர்கள். பிரமாண்ட கப்பல் நமது நாட்டுக்கு வந்ததில் சிலர் பெருமைப்பட்டு கொண்டிருந்தாலும், அந்த கப்பலில் வந்த அமெரிக்கர்கள் இலங்கையைவிட்டு “தெறித்து“ ஓடியிருக்கிறார்கள்.

காரணம்- கப்பலில் வந்த இரண்டு யுவதிகள் திருகோணமலை உப்புவெளியில் உள்ள விடுதியொன்றிற்கு வந்தபோது, அவர்கள் இருவரையும் கூட்டாக துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார் முல்லைத்தீவை சேர்ந்த ஆசாமியொருவர்.

2018 பசுபிக் பங்காண்மை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிமித்தம் யூ.எஸ்.என்.எஸ். மேர்சி எனும் அமெரிக்க கடற்படை வைத்தியசாலை கப்பலில் வந்த இரு அமெரிக்க யுவதிகள் தமக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் உப்புவெளி பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் தங்கியிருந்தவாறு தமக்கு மென்பானம் கொண்டு வந்து தருமாறு விடுதியின் சேவையாளரிடம் தெரிவித்தனர்.

இதன்போது மென்பானத்துடன் குறித்த அறைக்கு சென்ற ஊழியர் அங்கு தனிமையிலிருந்த யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.

இச் சம்பவத்தை அந்த யுவதிகள் இருவரும் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here