எண் கணிதப்படி மார்ச் மாதம் எந்த எண்ணிற்கு அதிர்ஸ்டம்?

மார்ச் மாத எண்கணிதப்படி எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் என்பதை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார்.

1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு

நடக்காது என்று சொல்பவர்களிடம் அதனை நடத்திக்காட்டி வெற்றி பெறும் குணம் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே…  இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது. மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். பணவரத்து அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம் பெறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று நரசிம்மருக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு

மற்றவர்களின் எண்ணம் அறிந்து, தனது காரியங்களை சாதித்து கொள்ளும் இரண்டாம் எண் அன்பர்களே… இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார்.

நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்ப்புகள் அகலும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று விரதம் இருந்து அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு

தனது காரியங்களில் மட்டுமல்லாமல் அடுத்தவர்களுடைய காரியங்களையும் வெற்றிகரமாக செய்யும் மனதுடைய மூன்றாம் எண் அன்பர்களே… இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பலனாக லாபம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வீண்பழி உண்டாகலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது.

பரிகாரம்: தினமும் திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.

4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு

தனது லட்சியத்தில் உறுதியாக இருக்கும் நான்காம் எண் அன்பர்களே… இந்த மாதம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.

பெண்களுக்கு அறிவுத் திறமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று விநாயக பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.

5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு

வீன் ஆசைகளை மனதில் வளத்துக் கொள்ளாத ஐந்தாம் எண் அன்பர்களே… இந்த மாதம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும்.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமத போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள்.

மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.

பரிகாரம்: தினமும் திருப்பல்லாண்டு சொல்லி ரங்கநாதரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு

அடுத்தவர்களின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யும் ஆறாம் எண் அன்பர்களே… இந்த மாதம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.

தொழில் வியாபாரத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும்.

7, 16, 25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு

நியாயமான கோரிக்கையை தைரியமாக முன்வைக்கும் ஏழாம் எண் அன்பர்களே… இந்த மாதம் பணவரத்து இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். பெண்களுக்கு முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வியில் மேன்மை ஏற்படும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை சனிக்கிழமை அன்று அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்.

8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு

தனது அனுபவங்களை மற்றவர்களிடம் கலந்து கொள்ளும் எட்டாம் எண் அன்பர்களே… இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குப் பின் முனனேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். அரசியல்துறையினருக்கு நிதி நிலைமை சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.

பரிகாரம்: தினமும் ராம நாமம் சொல்லி ஆஞ்சநேயரை வணங்குவதால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு…

எந்த பிரச்சனைகளையும் அதன் காரணத்தை அறிந்து நல்ல முடிவெடுக்க நினைக்கும் தன்மை உடைய ஒன்பதாம் எண் அன்பர்களே… இந்த மாதம் ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். அரசியல்துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று முருகனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here