சிறந்த கல்விக்கடன் திட்டங்கள்…. எங்கு, எப்படி எடுக்கலாம்?


© தமிழ்பக்கம்

உயர்கல்வி கற்கும் மாணவர்கள் பலரிற்கு உள்ள பெரிய பிரச்சனை பணம். கல்வி கற்க விருப்பமிருந்தாலும், பணம் பிரச்சனையாக இருக்கும். பணத்தை எப்படி திரட்டுவது என்பதில்தான் பிரச்சனை. வங்கிகளில் கல்விக்கடன் வசதிகள் இருந்தாலும் பலர் அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. எந்த வங்கியை அணுகுவதென தெரியாமல் சிலர் தவறான இடங்களை அணுகி தலையை பிய்த்துக் கொள்வதுண்டு.

எந்தெந்த வங்கியில் சிறந்த கடன் திட்டங்களை பெறலாம்… அதன் நிபந்தனைகள் உள்ளிட்ட விபரங்களை திரட்டியுள்ளோம். கல்விக்கடன் திட்டம் பற்றிய குழப்பங்களுடன் இருக்கும் மாணவர்களிற்கு இது சிறிய வழிகாட்டியாக இருக்கும்.

புத்தி (BUDDHI) கல்விக்கடன்

உள்நாட்டு அல்லது வெளிநாட்டு கல்வியைப் பெறவும் துறைசார் நிபுனத்துவத்தை அடையவும் உயர் கல்வியைப் பெறுவதற்கான உரிய வழிகாட்டலை எதிர்பார்த்து நிற்கின்றவர்களுக்கும் புத்தி கல்விக்கடன் உதவிகரமாக அமைகின்றது. தேசிய சேமிப்பு வங்கி இக் கல்விக்கடனை வழங்கி வருகின்றது.

க.பொ.த உயர்தரக் கல்வியின் பின்னர் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற கற்கைநெறிகளை தனியார் நிறுவனங்களில் தொடரும் மாணவர்களுக்கு இக் கல்விக்கடன் வழங்கப்படுகின்றது. இக் கல்விக்கடனில் கற்கைநெறிக் கட்டணத்தில் 75 சதவீதம் கடனாக வழங்கப்படுகின்றது.

கல்விக்கடனாக உள்நாட்டில் கல்வியைத் தொடர விரும்புபவர்கள் 5 மில்லியன் ரூபா வரை பெற்றுக்கொள்ளலாம். வெளிநாட்டில் கல்வியைத்; தொடர விரும்புபவர்கள் 10 மில்லியன் ரூபா வரை பெற்றுக் கொள்ளலாம். உள்நாட்டில் கல்வியைத் தொடர்பவர்கள் 5 வருடத்திலும் வெளிநாட்டில் கல்வியை தொடர்பவர்கள் 10 வருடத்திலும் கடனை மீளச் செலுத்தலாம்.

உள்நாட்டில் கல்வியை தொடர்பவர்கள் 2.5 மில்லியன் ரூபா கடனை 2 பிணையாளிகளின் ஆதரவுடன் பெற்றுக்கொள்ளலாம். பிணையாளிகள் பெற்றோர்களாக அரசாங்க தொழில் புரிபவர்களாக இருக்க வேண்டும். அரசாங்க தொழில் புரியாத பெற்றோர்கள் தமது வருமான மூலத்தையும் கடனை திருப்பி செலுத்துவதற்கான தகுநிலையையும் உறுதிப்படுத்த வேண்டும்.மொத்தமாக 5 மில்லியன் ரூபா கடனை பெறுவதற்கு ஆதனத்தினை ஈடுவைக்க வேண்டும்.
வெளிநாட்டில் கல்வியை தொடர்பவர்கள் மொத்த கடன் தொகையினையும் ஆதனத்தை ஈடு வைத்தே பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டில் கல்வியை தொடர்பவர்கள் இலங்கையில் வசிக்கும் ஒருவரை சக விண்ணப்பதாரியாக குறிப்பிட வேண்டும். அவர் குடும்ப உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

செலான் வங்கி கல்விக்கடன்

உள்நாட்டில் வேலை செய்துகொண்டு கற்பவர்களுக்கு இக்கடன் வழங்கப்படுகின்றது. 20 வயது தொடக்கம் 60 வயது வரை இக்கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். ஊஐஆயுஇ ஆடீயுஇ ஐவு போன்ற தொழில்வாண்மையான கற்கைநெறிகளுக்கே இக்கடன் வழங்கப்படுகின்றது. தமது பணியில் 3 வருட சேவைக்காலத்தையும் மாதந்தம் 40 000 ரூபா ஊதியம் பெறுபவராகவும் இருக்க வேண்டும். வேலை செய்துகொண்டு படிக்கும் மாணவர்கள் தமது ஊதியத்தின் 15 மடங்கு பெறுமதியான தொகையினையே கல்விக் கடனாக பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர விரும்பும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களின் வருமானத்தினை அடிப்படையாகக்கொண்டு இக்கடன் வழங்கப்படுகின்றது. பெற்றோர்கள் தமது சம்பள நிதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். கற்கைநெறிக் கட்டணம், தங்குமிடம், வாழ்க்கைச்செலவு என்பவற்றை உள்ளடக்கி இக் கடன் தொகை வழங்கப்படுகின்றது. 100 000 ரூபாவிலிருந்து 10 மில்லியன் ரூபா வரை இக்கடன் தொகையினை பெறமுடியும்.

உள்நாட்டில் கல்வியை தொடர விரும்புபவர்கள் 5 வருடத்திலும் வெளிநாட்டில் கல்வியை தொடர விரும்புபவர்கள் 7 வருடத்திலும் கடனை மீளச்செலுத்தலாம். உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ உயர்கல்வியை தொடர இருந்தாலும் எவ்வளவு கடனை விண்ணப்பதாரி பெற்றுக்கொள்ளலாம் என்பதை வங்கியே தீர்மானிக்கும்.

FUTURE PLUS கல்விக்கடன்

பெற்றோரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் பிள்ளைகளின் உயர்கல்வித் தேவைக்காக இக் கல்விக்கடன் வழங்கப்படுகன்றது. இக்கடன் ஹற்றன் நஷனல் வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. வேலை செய்துகொண்டும் படிக்க விரும்பும் மாணவர்கள் இக்கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

பெற்றோர்கள் அரசாங்க வேலையாக இருந்தால் சம்பள அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அரசாங்க வேலை இல்லாத பெற்றோர்கள் கடனை மீளத்திருப்பிச் செலுத்தும் தமது ஆற்றலை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு தமது வியாபார நிதி அறிக்கையை சமர்ப்பிக்க முடியும். 18 வயதுக்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவர்கள்.

CIMA, CIM, ACCA, CFA, IIT, CA, MEDICINE, ENGINEERING, ACCOUNTS, IT, HOSPITALITY முதலான தொழில்வாண்மையான கற்கைநெறிகளுக்கு இக்கடன் வழங்கப்படுகின்றது. கல்விக்கடனில் 250 000 ரூபாவினை பிணையாளியின் ஆதரவுடன் பெற்றுக்கொள்ள முடியும். பிணையாளி தனது சம்பள அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். 250 000 ரூபா தொடக்கம் 750 000 ரூபா வரையான கடன் தொகையை பெறுவதற்கு விண்ணப்பதாரி குறிப்பிட்ட ஆதனத்தை ஈடு வைத்தே கடனை பெற்றுக்கொள்ள முடியும்.

கடனை மீளச் செலுத்தும் காலம் 3 வருடங்கள் தொடக்கம் 7 வருடங்களில் திருப்பி செலுத்தலாம். உள்நாட்டில் கல்வியை தொடர விரும்புபவர்களுக்கு பதிவுக்கட்டணம், விரிவுரைக்கட்டணம், பரீட்சைக்கட்டணம் என்பன கல்விக்கடனுக்காக கருத்தில்; எடுக்கப்படுகின்றது. வெளிநாட்டில் கல்வியை தொடர விரும்புபவர்களுக்கு இவற்றுடன் தங்குமிடம் மற்றும் வாழ்க்கைச்செலவுகளும் கவனத்தில் எடுக்கப்படுகின்றது.

ASPIRE கல்விக்கான கடன் சேவை

உயர்கல்வியை தொடர விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தொழில்புரிந்து கொண்டு படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் இக்கடன் வழங்கப்படுகின்றது. வெற்றிகரமான எதிர்காலத்திற்கு ஏற்ற துணையான இக்கடனை Pan Asia வங்கி வழங்குகின்றது.

கல்விக்கான செலவின் 100% வழங்குவதற்காக ரூபா. 50,000 முதல் ரூபா. 7.5 மில்லியன் வரை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். மீளச் செலுத்துவதற்கு 7 வருடகாலம் வழங்கப்படுகின்றது.

பிரிவு A
பிள்ளைகளின் உயர்கல்வித் தேவைக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட பட்டப்படிப்பிற்காக, நாட்டின் தனியார் அல்லது பாதி தனியார் மயப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக, நம் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பல்கலைக்கழக, வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கு மற்றும் தொழில் ரீதியான பரீட்சைகளுக்கு இக்கடன் சேவையினை பெற்றுக் கொள்ள முடியும்.

பிரிவு B
தொழில் ரீதியான உயர்கல்வித் தேவைக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட வெளிவாரிப் பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு. கலாநிதிப் பட்டம் அல்லது தொழில் ரீதியான தகைமைகளுக்காக இக்கடன் வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

தகைமைகள்

கடனுக்கு விண்ணப்பிப்பவர் இலங்கைப் பிரஜையாக இருப்பதுடன் கீழ்காணும் பிரிவுகளுக்கு அமைவாக இருத்தலும் அவசியமாகும்.

பிரிவு A
• 18 வயதைவிடக் கூடிய பிள்ளையாயின் கடனுக்கு இணைப்பு விண்ணப்பதாரியாக இருத்தல் வேண்டும்.
• நேர்த்தியான CRIB அறிக்கை மற்றும் மீளச் செலுத்தும் இயலுமை.

பிரிவு B
• நிலையான தொழில் இருக்க வேண்டும்.
• ரூபா. 20,000 அடிப்படைச் சம்பளத்துடன் ஆகக் குறைந்தது ரூபா. 25,000 தேறிய சம்பளமாக இருத்தல் வேண்டும்.
• ஊசுஐடீ அறிக்கை நேர்த்தியாகவும் மீளச் செலுத்தும் இயலுமை தெளிவாக ஆதாரப்படுப்பட வேண்டும்.
கடன் தொகை மற்றும் மீள்செலுத்துகை
அனைத்து செலவுகளும் கல்வி நிறுவனத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகுந்த ஆவணங்களினால் உறுதிப்படுத்தப்படுவதுடன் இரு பிரிவிலும் மொத்தத் தொகையின் 25 சதவிகிதம் கடன் பெற்றுக் கொள்பவர்களினால் வழங்கப்பட வேண்டும்.

பிரிவு A
கடன் தொகை ஆகக்குறைந்தது ரூபா. 50,000 இலிருந்து அதிகபட்சம் ரூபா. 7.5 மில்லியன் வரை வழங்கப்படும். இக் கடன் பணத்தினைக் கொண்டு கல்வி நிலையத்தில் இணைய, பதிவு செய்ய, கல்விக்கான கட்டணம், பரீட்சைக் கட்டணம் அல்லது பல்கலைக்கழக தங்குமிட வசதிகளுக்காகவும் பயன்படுத்த முடியும்.

பிரிவு B
கடன் தொகை ஆகக்குறைந்தது ரூபா. 50,000 இலிருந்து அதிகபட்சம் ரூபா. 1 மில்லியன் வரை பெற்றுக்கொள்ளலாம். மீளச் செலுத்தும் காலம் அதிகபட்சம் 7 வருடங்களாகும்.

WISDOM உயர்கல்விக் கடன்
பாடசாலைக் கல்வியை முடித்து டிப்ளோமா, பட்டப்படிப்பு, தொழில்வாண்மையான தொழில்தகுதியான கற்கைநெறிகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கும் தொழில்புரிந்து கொண்டு உயர்கல்வியை கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கும் மக்கள் வங்கியானது றுஐளுனுழுஆ உயர்கல்விக் கடனை வழங்கி வருகின்றது.
இக் கடனில் மாணவர்கள் அதிகப்பட்சமாக 10 மில்லியன் ரூபா வரை கடனாகப் பெற்றுக் கொள்ளகூடடியதாக உள்ளது. கடனை 07 வருட காலப்பகுதிக்குள் மீளச் செலுத்துவதற்கான ஒழுங்குகள் செய்து தரப்படும்.

கடனில் முதல் 5 மில்லியன் ரூபாவினை பிணையாளியின் ஆதரவுடன் பெற்றுக்கொள்ள முடியும். 5 மில்லியனுக்கு மேற்பட்ட கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்கு பெறுமதியான ஆதனத்தை ஈடுவைத்து பெற்றுக்கொள்ள முடியும்.
கடனுக்கான வட்டி 15% – 16% வரை அறவிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here