கிளிநொச்சியில் மர்ம நபர்களால் ஒருவர் வெட்டிக் கொலை!


கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. இன்று (22) காலை இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தருமபுரம் மேற்கு 6 யூனிட்டை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான அரசசிங்கம் கௌரியானந்தம் (28) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தருமபுரம் 2ஆம் யூனிட் குளத்தடியில் அவரது சடலம் இன்று காலையில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

குளக்கரையில் அவரது மோட்டார்சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கொலைச்சம்பத்தில் ஈடுபட்டவர்களை கண்டறி, தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here