அஜித் மிஸ் பண்ணிய கதை

0

கும்மாளம் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து பட்டியல், அறிந்தும் அறியாமலும், சர்வம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், அஜித் நடிப்பில் பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கினார். விஷ்ணுவர்தன் கடைசியாக இயக்கிய படம் யட்சன்.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவிருக்கிறார் என்று தகவல் அடிபட்டு வந்தது. அதை விஷ்ணுவர்தனும் உறுதிபடுத்தினார். அஜித்துக்காக கதையை ரெடி பண்ணிவிட்டு காத்திருந்தார். ஆனால் அஜித்தோ தொடர்ந்து சிவாவின் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதனால் விரக்தியடைந்த விஷ்ணுவர்தன் அஜித்துக்கு சொன்ன கதையை பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகரிடம் சொன்னார். இந்த படத்தை தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரண் ஜோகர் மற்றும் ஷபீர் பாக்ஸ்வாலா இணைந்து தயாரிக்கின்றனர்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை கரண் ஜோகர் டுவீட்டரில் தெரிவித்துள்ளார். கார்கில் போரின்போது உயிர் தியாகம் செய்த கப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி அந்த படம் உருவாகவிருப்பதாகவும், அதில் விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here