2019 காதலர் தினத்திற்கான உடைகளின் நிறமும்… அர்த்தங்களும்!

காதலர் தினத்திற்கு இன்னுமிருப்பது வெறும் நான்கு நாட்கள்தான். வரும் பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும். “ஐ ஆம் வெயிட்டிங்“ என கொலைப்பசியோடு பலர் இந்த நாளுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள் என்பது நமக்கும் தெரியும்.

காதலி இருப்பவர்கள், காதலியை புரபோஸ் பண்ண காத்திருப்பவர்கள், இரண்டுமே இல்லாதவர்கள் என, எல்லா வகையானவர்களும் 14ம் திகதிக்காக காத்திருப்பார்கள்.

இப்பொழுது, காதலர் தினத்திற்கு புதிய கலாசாரம் ஒன்று வந்து விட்டது. ஒவ்வொரு காதலர் தினத்திற்கும் என்ன ட்ரஸ் கோட் கலர், பொருள்கள் என அறிவிக்கிறார்கள். அதை தெரிந்து, அதன்படி காதலர் தினத்தை கொண்டாடுவதில் காதலர்களிற்கு ஒரு இன்பம்.

அதன்படி, இந்த காதலர் தினத்திற்குரிய நிறங்களும், அதன்  அர்த்தங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை தருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் பச்சை, சிவப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்கள் பொதுவானவையாக உள்ளன. மற்ற சில நிறங்கள் மாறி மாறி வரும். அப்படி இந்த வருடத்துக்கான டிரஸ் கலர்களாக- ஒரேஞ்ச், சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை, பிங்க், கருப்பு, மஞ்சள், பிரௌன், கிரே ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

அர்த்தங்கள் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

நீலம்  

காதலர் தினத்தன்று நீலநிற உடை அணிந்தால், அவர் ஃபீரியாக இருக்கிறார் என அர்த்தம். எந்த கமிட்மெண்ட்டும் இல்லை என்பதற்கான அடையாளம். நீல நிறம் சிங்கிள் என்பதை தெரிவிக்கும் குறியீடாக இருக்கிறது. “நான் மிகவும் சுதந்திரமான இருக்கிறேன். அன்பான ஒரு உறவுக்குள் கமிட் ஆக நினைக்கிறேன். அன்பானவர்களை வரவேற்கிறேன்“ என்ற செய்தியை இந்த உலகத்துக்குத் தெரிவிக்கிறார்கள்.

வெல்கம் டூ அப்ளை என்பது தான் இதன் அர்த்தம்.

பச்சை 

க்ரீன் சிக்னல் என்பர்களே… அதுதான் இது. தன்னுடைய இணையிடம் காதலை சொல்லிவிட்டு, ஒருவர் காத்திருந்தால்… அவருக்கு வழங்கப்படும் ஒரு முடிவின் நிறம் இது. அவரது இணை பச்சை நிற ஆடை அணிந்து வந்தால், க்ரீன் சிக்னல் விழுந்ததாக அர்த்தம். அதுதான்… காதலை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்.

பச்சை நிற ஆடையை வைத்தே காதலில் கமிட்மெண்ட்டில் இருப்பவர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

ஒரேஞ்ச்

இயற்பியல் தத்துவத்தின்படி, ஒரேஞ்ச் நிறம் என்பது சிவப்பு நிறத்துக்கும் மஞ்சள் நிறத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிறம். எப்போதும் ஜாலியாக பொழுதுபோக்கும் மனநிலையைக் கொடுப்பது ஒரேஞ்ச் நிறம். காதலர் தினத்தன்று ஒரேஞ்ச் நிற டிரஸ் அணிந்தால் அது அவர்கள் அதிகம் நேசிக்கும் ஒருவரிடம் தன்னுடைய காதலைச் சொல்லப் போகிறார் என்று அர்த்தம்.

அன்றைக்கு அவர்கள் குதூகலத்தில் துள்ளுவார்கள்.

பிங்க்

பிங்க் நிறம் என்பது மிக வெளிரிய  சிவப்பு நிறத்தில் இருந்து தோன்றுவது. இந்த நிறம் பொதுவாக துறுதுறுவென, அன்பான, பெண்மையை வெளிப்படுத்துவதாக, ரொமாண்டிக்கான ஒரு கலர். இந்த பிங்க் நிற டிரஸ்ஸை காதலர் தினத்தன்று அணிந்தால், அது தன்னிடம் காதலைச் சொன்னவரின் காதலை இப்போது தான் ஏற்றுக் கொண்டேன் என்பதாக அர்த்தம். அவர் என் பதிலுக்காக காத்திருக்கிறார் என்று அர்த்தம்.

கறுப்பு

கறுப்பு நிறம் என்பது மனச்சோர்வின் வெளிப்பாடு. இது மிகவும் மோசமானது. வன்முறை மற்றும் மோசமான முடிவு ஆகிய பொருள்களைத் தரக் கூடியது. அதனால்தான் துக்க நாட்களில் கறுப்பு நிறத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறோம். காதலர் தினத்தன்னு ஒருவர் கறுப்பு நிற ஆடை அணிந்திருந்தால் அது அவருடைய காதல் புரபோசல் அவர் விரும்பும் நபரால் நிராகரிக்கப்பட்டது என்று அர்த்தம்.

நிராகரிப்புக்கான காரணம் உன்பது ஒவ்வொரு நபருக்கும் சூழலுக்கும் ஏற்றபடி மாறும்.

வெள்ளை

வெள்ளை நிறத்தை நிறமி வண்ணம் என்று சொல்வார்கள். இதில் எந்த கலரைச் சேர்த்தாலும் அந்த வெள்ளையும் அதனோடு சேர்க்கப்பட்ட நிறமாகவே மாறிவிடும். பொதுவாக வெள்ளை நிறம் என்பது அமைதியை வெளிப்படுத்துதல், தூய்மை, நேர்மை ஆகியவற்றை உணர்த்தக் கூடியதாகக் கருதப்படுகிறது. வெள்ளை நிற ஆடையை ஒருவர் காதலர் தினத்தன்று அணிந்தால் அவர் ஏற்கனவே கமிட்மெண்ட்டில் இருக்கிறார். மற்ற யாருடைய புரபோசலையும் ஏற்க முடியாது என்பதை சொல்லக் கூடியதாக இந்த வெ்ளளை நிறம் இருக்கிறது.

சிவப்பு

சிவப்பு நிறம் என்பது பேரார்வத்தைக் குறிக்கக்கூடிய நிறமாக இருக்கிறது. காதலர் தினத்தன்று ஒருவர் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தால் நிச்சயம் நீங்கள் அவரைப் பார்த்து பொறாமை தான் பட வேண்டும். ஏன் தெரியுமா?

அந்த நிறத்தின் பொருளே அவர் ஒரு ரொமாண்டிக்கான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே. தன்னுடைய காதல் இணையுடன் ஜாலியான சுவாரஸ்யமான காதலை செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

மஞ்சள்

ஒரேஞ்ச் நிறத்தையும் பச்சை நிறத்தையும் ஒன்றாகச் சேர்த்தீர்கள் என்றால் உங்களுக்கு மஞ்சள் நிறம் கிடைக்கும். பொதுவாக மஞ்சள் நிறம் பொறாமை, தூய்மையின்மை, உண்மையின்மை ஆகியவற்றின் குறியீடாக விளங்குகிறது. அதனால் காதலர் தினத்தன்று யாரேனும் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தால் அது அவர்களிடம் தூய்மையாக இல்லாத தன்னுடைய காதலை முறித்துக் கொண்டதை வெளிப்படுத்துவதன் அறிகுறியாகும்.

அதாவது அவர் பிரேக்-அப் ஆனவர் என்று பொருள்.

பிரௌன்

இரண்டு கலர்களுக்கும் மேல் மூன்றாவதான ஒரு கலர் சேர்ந்தால் அது பிரௌனாக மாறிவிடும். இது பல விஷயங்கள் கலந்திருப்பதை உணர்த்துகிறது. இந்த நிற ஆடையை அணிந்திருந்தால், எதிர்பாராத விதமாக இவர் ஒருவரிடம் கொடுத்த பிரபோசல் ரிஜக்ட் செய்யப்பட்டு விட்டது. என்னுடைய இதயம் உடைந்து நொறுங்கியிருக்கிறது என்று அர்த்தம்.

சாம்பல்

சாம்பல் நடுநிலைமையை உணர்த்தக் கூடியது. ஆனால் காதலர் தினத்தன்று சாம்பல் நிற அணிந்திருந்தால் காதலில் அந்த நபருக்குப் பெரிதாக ஆர்வமோ விருப்பமோ இல்லை என்று அர்த்தம். என்ன பாஸ்! இந்த வருடமாவது காதலர் தினத்தன்று உங்களுக்கும் உங்களுடைய காதல் ஸ்டேட்டஸ்க்கும் ஏற்ற நிறம் எது என்று தெளிவாகப் புரிந்து கொண்டு டிரஸ் தேர்வு செய்து அணியுங்கள். ஏன்னா அதுல உங்க வாழ்க்கை மட்டுமில்ல, மத்தவங்க வாழ்க்கையும் சேர்ந்து இருக்கிறதல்லவா.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here