மாணவனிற்கு அடித்த ஆசிரியைக்கு 2 வருட சிறைத்தண்டனை!


மாணவன் ஒருவனை அடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், குருணாகல பிரதேசத்தைச் சேர்ந்து ஆசிரியை ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி குருனாகல மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2011ம் ஆண்டு மாணவன் ஒருவனை அடித்ததாக, ஆசரியை ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கு குருணாகல மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த 1ம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆசிரியைக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையையும், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here