பேருந்தில் ஏற்பட்ட மோசமான அனுபவத்தை மீ டூ பதிவிட்ட சிங்கள யுவதி: கலக்கும் யூடியுப்!


பேருந்துகளில் பெண்களிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் கொடுமைகளை பற்றி பகிரங்கமாக பேசி, பரபரப்பை கிளப்பி வருகிறார் சிங்கள யுவதியொருவர்.

கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இந்த யுவதி, பலரும்் பேசத்தயங்கும் இந்த விடயங்களை, யூடியுப் மூலம் பேசி, சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தி வருகிறார்.

மல்கி ஒபதா என்ற யுவதி இப்பொழுது சிங்கள மக்களிடையே யூடியுப்பில் மிக பிரபலம்.

பொது பேருந்தில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது, வெளியில் நின்ற ஆண் ஒருவர், தனது மர்ம உறுப்பை காண்பித்ததாகவும், அப்போது பயத்தில் கத்த முயன்றாலும், குரல் எழாமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், பொது போக்குவரத்துக்களில் பெண்களிற்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து பேச வேண்டுமென்ற முடிவை அந்த சந்தர்ப்பத்தின் பின் எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அது குறித்து மீ ரூ பதிவை கடந்த வருட இறுதியில் ருவிற்றரில் இட்டிருந்தார்.

பெண்களிற்கு இழைக்கப்பட்டு வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து அவரது யூடியுப் பக்கத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. வீடுகளிலும், வெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் அத்துமீறல்களை துணிந்து பேச வேண்டுமென்றும், அதுவே பெண்களிற்கான பாதுகாப்பை உருவாக்குமென்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here