மைத்திரி, சந்திரிகாவின் செயலாளர்கள் லஞ்சம் வாங்கும்போது கையும்மெய்யுமாக சிக்கினர்!

இந்திய வர்த்தகர் ஒருவரிடமிருந்து கந்தளாய் சீனித்தொழிற்சாலை பங்குக் கொள்வனவு விவகாரத்தில் 56 கோடி ரூபா லஞ்சம் பேசி, அதனை 20 கோடியாகக் குறைத்து அதில் 2 கோடியைப் பெற்ற வேளையில் ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரி மஹனாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசாநாயக்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீண்டகாலம் அரச சேவையிலிருந்துள்ளதுடன் முன்னவர் முன்னாள் காணி அமைச்சின் செயலாளராகவும், திசாநாயக்க சந்திரிக்காவின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

நட்சத்திர ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் வைத்து பணம் கைமாறும் தகவல் கிடைக்கப் பெற்றதன் பின்னணியில் குறித்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here