ஞானசாரரின் விடுதலைக்காக ஐ.தே.கவும் களமிறங்கியது!

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கும் விடயத்தில், ஐ.தே.கவும் களமிறங்கியுள்ளது. ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பளிக்கும்படி கோரி, புத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த உள்ளிட்டவர்கள் வெவ்வேறாக ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி இந்தக் கோரிக்கைகளை தயவுடன் நோக்கி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் நடவடி்கை எடுக்குமாறு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, கடிதத்தில் கோரியுள்ளார்.

இதேவேளை, ஞானசாரர் விரைவில் பொதுமன்னிப்பு பெறுவார் என சுதந்திரக்கட்சியின் எம்.பி சாந்த பண்டார நேற்று குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here