சனத்தொகையில் மாற்றமில்லை… எதுவும் நடக்கலையா?

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியில் மாற்றமில்லை என இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. 2017ம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2016ம் மற்றும் 2017ம் ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 1.1 வீதமாக பதிவாகியுள்ளது. இலங்கையின் ஆண்களின் சனத்தொகை வீதம் 48.4 ஆகவும், பெண்களின் சனத்தொகை வீதம் 51.6 வீதமாகவும் காணப்படுகின்றது. 15 முதல் 59 வரையிலானவர்களே மொத்த சனத்தொகையில் அதிகளவு பங்களிப்பினை வழங்கியுள்ளனர். மேலும், 62.4 வீதமானவர்கள் 15 முதல் 59 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here