உலகின் ஏழு கண்டங்களிலும் மரதன் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட முதல் இலங்கையர்!

அந்­தாட்டிக் ஐஸ் மரதன் தொட­ரினை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­ததன் மூலம் உலகின் ஏழு கண்­டங்­க­ளிலும்
நடை­பெற்ற மரதன் ஓட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்­றிய முதல் இலங்­கையர் என்னும் புதிய சாத­னை­யினை நிலை­நாட்­டினார் மரதன் ஓட்ட வீர­ரான ஹசன் யூசு­பலி.

மிகவும் கடு­மை­யான நிபந்­த­னைகள் கொண்ட அந்­தாட்டிக் கண்­டத்தின் அந்­தாட்டிக் ஐஸ் மரதன் தொடர் அதிக குளிர், பனிக்­கட்டிப் பாறைகள், மிகக் குறை­வான பார்வை வீச்சு என ஆபத்­துக்கள் நிறைந்த 42.2 கிலோ மீட்டர் ஓடு­பா­தை­யினை கொண்ட சவா­லான தொட­ராகும். குறித்த மரதன் தொடரை ஹசன் யூசு­பலி 8 மணித்­தி­யா­ல­யங்கள் மற்றும் 35 நிமி­டங்­களில் கடந்தார்.

மிகவும் ஆபத்­தான சூழ்­நி­லை­களை கொண்­டி­ருக்கும் இந்த மரதன் ஓட்டத் தொடரில் ஹசன் யூசு­ப­லி­யுடன் சேர்ந்து உலகின் முன்­னணி வீரர்கள் பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

அந்­தாட்டிக் மரதன் தொடரில் பங்­கேற்­ப­தற்கு முன்­ன­தாக ஹசன் யூசு­பலி உலகின் மிகவும் கடின மரதன் தொட­ராக கரு­தப்­படும் இன்கா ஓடு­பாதை மரதன் தொடரை ஓடி­மு­டித்த முதல் இலங்­கை­ய­ரா­கவும் பதி­வா­கி­யி­ருந்­தார்.

இத் தொடர் நிறை­வுக்குப் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட ஹசன் யூசு­பலி “அந்­தாட்டிக் ஐஸ் மரதன் தொடர் உலகின் மிகவும் கடி­ன­மான மரதன் தொடர் என்­பதால் அதனை எதிர்­பார்த்த நேர இடை­வெளி ஒன்றில் நிறைவு செய்­தது மகிழ்ச்­சி­யான விடயம். மேலும் உலகின் ஏனைய கடி­ன­மான மரதன் தொடர்­களில் பங்­கேற்­றது அந்தாட்டிக் ஐஸ் மரதன் ஓட்டத் தொடரினை நிறைவு செய்ய பலவகைகளிலும் உதவியாக இருந்தது” எனவும் தெரிவித்திருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here