அந்தரங்க உறவில் குறை கூறிய மனைவி: ஒரு அடி உலக்கையை மனைவியில் அந்தரங்க உறுப்பில் செலுத்திய கணவன்!

தாம்பத்திய உறவின்போது, கணவனின் குறையை மனைவி சுட்டிக்காட்டியதால் ஆத்திரமடைந்த கணவன் ஏடாகூட காரியத்தில் இறங்கியுள்ளார். மனைவியின் அந்தரங்க உறுப்பை சேதப்படுத்தியதுடன், தலையில் தாக்கி, அவரது கால்களையும் உடைத்துள்ளார்.

புஸ்ஸல்லலாவ பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த 43 வயதான பெண், கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான கணவரை கடந்த சனிக்கிழமை (12) நாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 24ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவிட்குட்பட்ட தயாபான பிரதேசத்தில் வசிக்கும் மேற்படி நபர், தனது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில், அவரது மர்ம உறுப்பு சிறியதென்பதால் தனக்கு பூரண திருப்தி கிடைப்பதில்லையென கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், கம்பு ஒன்றினால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.

கத்தியினால் கைகளில் வெட்டி காயப்படுத்தியுள்ளார். பின்னர் கால்களை தாக்கியபோது, மனைவி மயக்கமடைந்து விட்டார்.

பின்னர் சம்பல் இடிப்பதற்கு பாவிக்கப்படும் கித்துள் மரத்திலான ஒன்றரை அடி நீளமான உலக்கையை எடுத்து, மனைவியின் அந்தரங்க உறுப்பிற்குள் வைத்து, இன்னொரு கட்டையினால் அடித்து, அதை உட்செலுத்தியுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை, அவரது 16 வயதான மகனே, அயலவர்களின் உதவியுடன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்தார். வைத்தியர்கள் சுமார் ஐந்து மணித்தியாலம் சத்திரசிகிச்சை மேற்கொண்டு, பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் இருந்த உலக்கையை அகற்றினார்கள்.

சந்தேகநபரான கணவனை, புஸல்லாவ பொலிசார் கைது செய்து, நாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான சாந்தினி மீகொட முன்னிலையில் ஆஜர்செய்யபோது, வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here