மூட்டைப்பூச்சி தொல்லை: பம்பலப்பிட்டி Majestic Cineplex திரையரங்கொன்றிற்கு பூட்டு!

பம்பலப்பிட்டி Majestic Cineplex (MC)இல் உள்ள சினிமா திரையரங்கு ஒன்றை (superior cinema hall) மூட்டைப்பூச்சிக் காரணமாக மூடுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

சுப்பீரியர் சினிமா அரங்கில் உள்ள ஆசனங்களில் அதிகளவு மூட்டைப்பூச்சிகள் காணப்படுவதால் இதனை மூட நடவடிக்கை எடுத்ததாகவும், இது தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பரிசோதனைகளை முன்னெடுத்ததுடன் சினிமா அரங்கை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மூட்டைப்பூச்சிகளை அழித்து திரையரங்கை திறப்பதற்கு குறைந்தது 5 நாட்களாவது செல்லுமென்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here