AUS OPEN: முதற்சுற்று தோல்வியுடன் ஓய்வுபெற்றார் முர்ரே!

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரிட்டன் வீரர் அன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரிட்டனின் அன்டி முர்ரே, ஸ்பெயினின் ரொபர்டோ பாடிஸ்டா அகுட் மோதினர்.

முதலிரண்டு செட்டை 4-6, 4-6 என இழந்த அன்டி முர்ரே, பின் எழுச்சி கண்டு டை பிரேக்கர் வரை சென்ற அடுத்த இரண்டு செட்களை 7-6, 7-6 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் ஏமாற்றிய முர்ரே 2-6 எனக் கோட்டைவிட்டார்.

நான்கு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் அன்டி முர்ரே 4-6, 4-6, 7-6, 7-6, 2-6 என்ற செட் கணக்கில் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இவர், சமீபத்தில் அவுஸ்திரேலிய ஓபனுடன் ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார். இதுவரை மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் (2013, 2016ல் விம்பிள்டன் மற்றும் 2012ல் யு.எஸ் ஓபன்) வென்றிருந்த இவர், அவுஸ்திரேலிய ஓபனில் ஐந்து முறை (2010, 2011, 2013, 2015, 2016) இறுதிப் போட்டி வரை சென்றிருந்தார். இதேபோல பிரெஞ்ச் ஓபனில் ஒரு முறை (2016) இறுதிப் போட்டியோடு திரும்பினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here