AUS OPEN: நடால், ஷரபோவா வெற்றி!

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால், ரஷ்யாவின் மரியா ஷரபோவா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வெற்றி பெற்றனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், நடப்பு ஆண்டின் முதலாவது ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால், அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த் மோதினர். இரண்டு மணி நேரம், 15 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய நடால் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

2வது சுற்றுக்குள்

மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் தென்னாபிரிக்காவின் கெவின் அண்டர்சன் 6-3, 5-7, 6-2, 6-1 என்ற கணக்கில் பிரான்சின் அட்ரியன் மன்னாரினோவை தோற்கடித்தார். மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் செக்குடியரசின் தோமஸ் பெர்டிச், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், பிரான்சின் கேல் மான்பில்ஸ், அவுஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன், ஜோர்டான் தாம்ப்சன், ஜான் மில்மேன், ஸ்பெயினின் பெர்ணான்டோ வெர்டாஸ்கோ, இத்தாலியின் ஆன்ட்ரியாஸ் செப்பி உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, இங்கிலாந்தின் ஹாரியட் டார்ட் மோதினர். ஒரு மணி நேரம், 3 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஷரபோவா 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தின் அலிசன் வானை வீழ்த்தினார். ஜெர்மனியின் கெர்பர் 6-2, 6-2 என, சுலோவேனியாவின் போலோனா ஹெர்கொக்கை வென்றார்.

மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், அவுஸ்திரேலியாவின் ஆஷ்லே பேர்டி, பிரான்சின் கரோலின் கார்சியா, நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ், சீனாவின் யபான் வாங், ரஷ்யாவின் அனஸ்டாசியா பவுலிசென்கோவா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here