தேசிய சோட்டாகான் கராத்தே போட்டியில் பதக்கங்களை வடக்கு வீரர்கள்!

10ஆவது தேசிய சோட்டாகான் கராத்தே போட்டியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் வடமாகாண ஜே.கே.எப் சோட்டாகான் கராத்தே கழக்கத்தின் சார்பில் பங்குபற்றிய மாணவர்கள் தங்கம் 7, வெள்ளி 6, வெண்கலம் 9 என 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்கள்.

ஆண்களுக்கான குமித்தே போட்டியில் றொசி ஷரிந் (75 கிலோ பிரிவு) தங்கம், ரேமஜன் (75 கிலோ பிரிவு) வெண்கலம், துஷாந் (67 கிலோ பிரிவு) வெள்ளி, முபீசன் (72 கிலோ பிரிவு) வெள்ளி, வாமணன் (67 கிலோ பிரிவு) வெண்கலம், குகானந் (55 கிலோ பிரிவு) வெள்ளி பதங்களைப் பெற்றனர்.

பெண்களுக்கான குமித்தே போட்டியில் சாரா (60 கிலோ பிரிவு) தங்கம், ஜெபப் பிரியா (50 கிலோ பிரிவு) வெள்ளி, புஸ்பகலா (50 கிலோ பிரிவு) தங்கம், கிருசிகா (55 கிலோ பிரிவு) வெண்கலம் பதங்கங்களைப் பெற்றனர்.

பெண்களுக்கான காட்டா போட்டியில் ஜெப்பிரியா-தங்கம், புஸ்பகலா-வெள்ளி, கிருசிகா-வெண்கலம் பதக்கங்களை வென்றனர்.

இவர்களுக்கான பயிற்சிகளை சென்சை எந்திரி றொசிஹரிந் வழங்கிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here