திருமணத்திற்கு சில மாதங்களின் முன் பருத்தித்துறை வாலிபர் உயிரிழந்தார்!

வடமராட்சி தும்பளை இளைஞர் இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழப்பு – தாயார் ஆபத்தான நிலையில்

தமிழ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற பருத்தித்துறையை சேர்ந்த தாயும், மகனும் விபத்தில் சிக்கியதில், மகன் உயிரிழந்துள்ளார். தாய் படுகாயமடைந்துள்ளார். நேற்று (30) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் கார்த்தீபன் (வயது 32) என்பவரே  உயிரிழந்துள்ளார் .

இந்தியாவிலுள்ள உறவினர்களை பார்க்க, இவர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள்.  நேற்று காலை 10-00 மணியளவில் உறவினர்களுடன் வெளியில் சென்ற வேளை, இவர்கள் பயணித்த வாகனம் அதிவேகமாக வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியுள்ளது

இவ் கோர விபத்தில் இருவர் சம்பவிடத்தில் உயிரிழந்தனர். வாகனத்தில் பயணம் செய்த தாயார் ஆபத்தான நிலையிலும் ஏனைய அனைவரும் படுகாயம் அடைந்து வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தமிழகத்தை சேர்ந்த வாகன சாரதியும் உயிரிழந்தார்.

உயிரிழந்த பருத்தித்துறை இளைஞருக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் இடம்பெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here