நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உயிரிழந்தார்!

நாவலப்பிட்டி, மகாவலி கங்கையில் நீராட சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் முழ்கி பலியாகியுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (13) மதியம் 12 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

பாடசாலை நண்பர்கள் ஐவர் மகாவலி கங்கையில் நீராட சென்ற போது அதில் மூன்று பேர், நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது அயலில் மேசன் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் மூவரையும் காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். அதில் ஒரு மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வழியில் உயிரிழந்தார்.

கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 18 வயதுடைய நாவலப்பிட்டி, அப்புகஸ்தலாவ பகுதியை சேர்ந்த விதுரசஞ்கன இலங்ககோன் என்ற மாணவனே உயிரிழந்துள்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here