சரியான குதிரையை களமிறக்கி வெற்றிபெறுவோம்!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க தரப்பிலிருந்து சரியான குதிரையை களமிறக்கி, வெற்றிபெறும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளில் ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில் இருவேறு நிலைபாடுகளில் இருப்பதாகவும் இந்தப் பிரச்சினைகைய அவர்களால் தீர்த்துக்​கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை – கலேவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரு மாதகாலமாக நாடு நிலையற்ற நிலையில் காணப்பட்டது. நாம் முன்னெடுத்த அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஜனாதிபதியால் தடையேற்படுத்தப்பட்டது. ஆனால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தற்போது விரைவாக 2,3 மடங்குகளாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here