இ.தொ.கவின் ஆல் இன் அழகுராஜாவா கணபதி?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரம்தான் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைப்பதாக சொல்பவர்கள், அதனை கம்பனிகர்ர்களிடம் கேட்கும் போது ஊடகங்களுக்கு கதவை மூடிவிடுகிறர்கள். பாராளுமன்றத்தில் பேசாமல் தமது வாயையும் மூடி கொள்கிறார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பா.சிவநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக அண்மையில் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் இ.தொ.கா மௌனம் காத்தது தொடர்பில் சிவநேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக மலையக வரலாறு முழுவதும் பல தலைவர்கள் பேசிவந்துள்ளார்கள். கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராகவும் கடந்த 20 ஆண்டுக்காலமாக பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் இந்திய இறக்குமதி துணை செயலாளர் ஒருவர் திடீர் என கூட்டு ஒப்பந்தம் இன்னும் இறுக்கமாக்க வேண்டும் என முகநூல் அறிக்கை விட்டுள்ளார். இத்தகைய இந்திய இறக்குமதிகளை முன்பு சாடி வந்த கணபதி கனகராஜ் இப்போது அந்த இறக்குமதிகளுடன் கலப்படமாகிவிட்டதால் இப்போது அவர்களுக்காக எக்காலத்திலும் இல்லாதவகையில் வக்காலத்து அரசியல் செய்து வருகிறார்.

அடிப்படை சம்பளமாக 1000/- ஐ ஆறுமுகன் தொண்டமான்தான் கேட்கிறார் என கூறுகிறார். இன்று ஒட்டுமொத்த மலையக மக்களினதும் கோரிக்கையாக அதுவே உள்ளது. ஆயிரக்கணக்கில் இளைஞர், யுவதிகள் ஒன்று திரண்டு இந்த கோரிக்கையை முன்வைக்கின்றனர். எமது பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணை முன்வைத்து 1000/- அடிப்படை சம்பளம் வழங்கப்படக்கூடியதே என ஆதாரங்களுடன் தெரிவித்தார்.

அத்தகைய ஒரு பிரேர்ரணையை நாங்கள் முன்வைக்கும் போது அந்த சபையில் இருந்த இ.தொ.கா உறுப்பினர் முத்து சிவலிங்கம் ஏன் வாய் திறக்கவில்லை. ஆறுமுகன் ஏன் சபைக்கு வந்து ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வேண்டும் என கேட்கவில்லை. அவர்களது கூட்டாளிகளான மகிந்தானந்த அளுத்கமகே, சி.பி.ரத்னாயக்கா போன்றவர்களுக்கு இருக்கும் தைரியமான கூட இவர்களுக்கு இல்லை. நவீன் திசாநாயக்க அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்க முடியாது என கூறும் போது எதிர் கட்சி வரிசையில் இருக்கும் இ.தொ.கா அதற்கு மறுத்து பேசவில்லை. ஆனால் அன்றைய தினமே நவீன் திசாநாயக்கவுடன் அமைச்சில் பரிசுகள் பரிமாறிக் கொண்ட படங்களைக் காண முடிகின்றது. இதில் இருந்து தெரிகிறது இ.தொ.கா ஐக்கிய தேசிய கட்சியுடன் கொண்டிருக்கும்

கள்ள உறவு

அவர்கள் அமைச்சு பதவியில் இருந்தால் பெற்று கொடுப்பதாக கூறியவர்கள் அது கிடைத்தபோதும் செய்யவில்லை. பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வந்தாலும் வாய்திறந்து பேசுவதில்லை. பேச்சுவார்த்தை மேசைக்கு ஊடகங்களை விடுவதுமில்லை. ஆனால், அத்தனைக்கும் ஆல் இன் அழகுராஜாவாக கணபதி கனகராஜா ஊடக அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறார். யார் யாருடனும் கூட்டணி வைப்பது என்பதை ஏற்கனவே மூன்று கட்சி தாவியவர் சொல்ல எந்த தகுதியும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் அமைச்சு பதவியில் இருந்தால் பெற்று கொடுப்பதாக கூறியவர்கள் அது கிடைத்தபோதும் செய்யவில்லை. பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வந்தாலும் வாய்திறந்து பேசுவதில்லை. பேச்சுவார்த்தை மேசைக்கு ஊடகங்களை விடுவதுமில்லை. ஆனால், அத்தனைக்கும் ஆல் இன் அழகுராஜாவாக கணபதி கனகராஜா ஊடக அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறார். யார் யாருடனும் கூட்டணி வைப்பது என்பதை ஏற்கனவே மூன்று கட்சி தாவியவர் சொல்ல எந்த தகுதியும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here