சிறையில் பூத்த நட்பு: கிளிநொச்சி தமிழ் அரசியல்கைதியின் வீட்டுக்கு சென்ற நாமல்!

நிதி மோசடி விசாரணைப்பிரிவினரால் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், தன்னுடன் அறிமுகமாகியிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரின் வீட்டிற்கு நேற்று நாமல் ராஜபக்ச சென்றார்.

கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள அரசியல்கைதியின் வீட்டிற்கே நாமல் ராஜபக்ச நேற்று (13) சென்றார்.

நேற்று திடீரென கிளிநொச்சிக்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்ச, பன்னங்கண்டியிலுள்ள பாடசாலையொன்றிற்கு வர்ணம் பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, இரணைமடுவில் உள்ள அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்றார்.

நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில், ஆனந்த் என்ற அரசியல் கைதியும் அவருடன் இருந்தார் என்றும், இதன்போது இருவரும் நண்பர்களாக பழகினார்கள் என்றும் கூறப்படுகிறது. தனது குடும்பத்தினர் நிரந்தர வீடில்லாமல் அவதிப்படுவதை ஆனந்த் சுட்டிக்காட்டியிருந்தார் என்று, நேற்று அவரது குடும்பத்தினரிடம் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

அந்த குடும்பத்திற்கு நிரந்தர வீடொன்றை அமைக்க தான் உத்தரவாதமளிப்பதாகவும், விரைவில் வீடு அவர்களிடம் கையளிக்கப்படும் என்றும் நாமல் உறுதியளித்தார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here