இலங்கை வீரர்களை வீழ்த்துவது பெண் ஒருவரா?: விசாரணை தீவிரம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களிற்கு பாலியல் உறவிற்காக அழகிகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் தரகர்கள், பின்னர் வீரர்களை அச்சுறுத்தி ஆட்டநிர்ணய சதிக்கு பயன்படுத்துகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழ்.

உலகின் பல பாகங்களிலும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் பயன்படுத்தும் இவ்வாறான தந்திரோபாயத்திற்கு இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் பலியானார்களா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இளம் வீரர்பன் தொடர்ந்தும் அணியில் இடம்பெற வேண்டுமென்றால் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட வேண்டுமென அதிகாரத்தில் உள்ள சிலரால் மிரட்டப்படுகிறார்கள் என்றும் சண்டே ரைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய அணி தொடக்கம், பல்வேறு மட்டங்களில் உள்ள அணிகளில் ஆடும் வீரர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த விசாரணைகளின் ஒரு அங்கமாக, கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த பெண், அணி வீரர்களை தனது வலையில் விழ வைத்து பின்னர், இந்தியாவை சேர்ந்த ஆட்ட நிர்ணயசதி கும்பலை சேர்ந்தவர்களிற்கு அறிமுகப்படுத்துகிறார்.

இந்த சதி வலைப்பின்னலில் உள்ளவர்களின் படங்கள், விபரத்தை வீரர்களிற்கு வழங்கியுள்ள இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், இந்த விவகாரத்தில் பல எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here