3 வருடம் யாழில் இருந்தேன்… யாரும் வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு தரவில்லை: ரெஜினோல்ட் குரே கவலை!

இந்தியாவின் உதவியுடன் தான் மஹிந்த ராஜபக்ஸ இறுதி யுத்தத்தை வெற்றி கொள்ள முடிந்தது என்பது அம்மணமான கசப்பான உண்மை என்று வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கூறியிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிரிவுபசார நிகழ்வில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர், “இந்தியா ஒருபோதும் இலங்கையில் பிரிவினைக்கான போராட்டத்துக்கு உதவியளிக்காது. அவர்களுக்கு சொந்த நிகழ்ச்சித்திட்டம் இருக்கிறது. ஏதேனும் அனுகூலங்கள் இருந்தாலன்றி அவர்கள் பிரிவினைக்கு உதவமாட்டார்கள் ” என்றும் கூறினார்.

கடந்த 3 வருடங்கள் ஆளுநராக இருந்த காலத்தில் தன்னை எவரும் தமது வீட்டுக்கு உணவருந்த வருமாறு அழைப்பு விடுக்கவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here