பருத்தித்துறையில் இளைஞன் அடித்துக் கொலை!

வடமராட்சியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இளைஞர் குழுக்களிற்குள் ஏற்பட்ட முரண்பாடே இந்த கோர கொலையில் முடிந்துள்ளது. பருததித்துறை கற்கோவளம் பகுதியில் நேற்று (13) இந்த கொலை இடம்பெற்றது.

வாசுதேவன் அமல்கரன் (அமல்) என்ற 22 வயது இளைஞனே கொல்லப்பட்டார்.

“பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் நண்பர்களுடன் உரையடிக்கொண்டிருந்தார். தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது, அதனை பேசியவாறு சிறுது தூரம் சென்ற இளைஞர் மீது இனம் தெரியாத நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தம்பி சென்றுள்ளனார்“ என சம்பவ இடத்தில் நின்ற இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழ்பக்கத்திற்கு கிடைத்த தகவல் குறித்து பருத்தித்துறை பொலிசாரை தொடர்பு கொண்டு வினவியபோது, உடனடியாக அதை உறுதிசெய்ய மறுத்து விட்டனர்.

இதேவேளை, கொலை சந்தேகநபர்கள் இருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here