இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பொலிஸ்மா அதிபர்!

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று காலை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வெளியிடப்பட்ட குரல் பதிவுகள் தொடர்பிலான விசாரணைக்காகவே பொலிஸ் மா அதிபரை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்று காலை 9.30 மணியளவில் அவரை குறித்த திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனது குரல் மாதிரியை பரிசோதனைக்கு வழங்கவே, அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையானார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here