பேருந்தில் ஏற ஓடிச்சென்ற வயோதிப பெண் தடுக்கி விழுந்து மரணம்!

பேருந்தில் ஏறுவதற்காக ஓடிச் சென்ற வயோதிபப் பெண், கால் தடுக்கி விழுந்து மயக்கமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த பரிதாப சம்பவம் நேற்று முன்தினம் (12) மட்டக்களப்பு வெருகல் பகுதியில் இடம்பெற்றது. கதிரவெளி, புதூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் செல்லாச்சி (63) என்ற வயோதிப பெண்ணே உயிரிழந்தார்.

வெருகலில் இருந்து கதிரவெளிக்கு செல்வதற்கு சென்றவர், பேருந்து வருவதை கண்டதும், அதில் ஏறுவதற்காக ஓடிச் சென்றுள்ளார். இதன்போது கால் தடுக்கி விழுந்து மயக்கமடைந்தார்.

உடனடியாக அவரை வாகரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

வாகரை பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தினர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here