சவேந்திரசில்வாவின் நியமனம் பற்றி மைத்திரியுடன் பேசுவாராம் சம்பந்தன்!

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் பற்றி விசாரித்து தண்டனை வழங்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது ஜனநாயகமாகாது. சவேந்திரசில்வா இராணுவ பிரதானியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“யுத்தத்தின் இறுதிக்காலத்தில் 58வது படையணி தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவை கடந்த 9ம் திகதி இராணுவ பிரதானியாக ஜனாதிபதி நியமித்தார்.

இது தொடர்பில் இரா.சம்பந்தன் கருத்து தெரிவித்தபோது-

“ஐ.நா மனிதஉரிமைகள் சபையின் பரிந்துரையை இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டும். ஐ.நா சபையில் இலங்கையும் ஒரு உறுப்பு நாடு. ஐ.நா நிபந்தனையை மீறி இலங்கை செயற்பட முடியாது“ என குறிப்பிட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here