ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைகள் இல்லை: கோத்தபாய ராஜபக்ஷ

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தடைகளையும் தான் நீக்கிவிட்டதாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணத்தை முடித்துகொண்டு திரும்பியுள்ள கோத்தபாய விஜயமகா விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு பேசுகையில் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கூறிய அவர்,“ தேர்தலுக்கு எதிராகவிருந்த அனைத்து தடைகளையும்  நீக்கிவிட்டதாகவும்,  நாடு திரும்பியதும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிகளை தான் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.”

இதன்மூலம் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது நியமென்றும், எதிர்கட்சி தலைவராக மஹிந்தவே நீடிப்பார் என்பதை போன்றும் கோத்தபாய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here