சிங்கராஜா வனத்தில் அமைக்கப்படும் வீதி தொடர்பில் விசாரணை வேண்டும்: யுனெஸ்கோ


சிங்கராஜா வனத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வீதி தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டுமென,யுனெஸ்கோவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு, சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர், அநுர திசாநாயக்கவிற்கு அனுப்பிய கடிதத்தில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் இலங்கையின் தேசிய ஆணையம் (SNCU) செயலாளர் நாயகம் பிரேமலால் சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனத்திடம் முறையான விசாரணையை நடாத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் (சி.என்.எஸ்) இயக்குனர் ரவீந்திர கரியவாசம், தி சன்ட் மார்னிங்கிற்கு தெரிவிக்கையில்,

“வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஆதரவுடன் சிங்கராஜ மழைக்காடுகளில்  ஒரு சாலை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இரண்டு மீட்டர் நீளமான சாலை கட்டப்பட்டது” என்று அவர் கூறினார்.

சிங்கராஜா யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாகவும், அதன் தனித்துவமான பல்லுயிரியலுடனான  உயிரினப் பாதுகாப்பு வலயமாகவும் (MAB) அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, மழைக்காடு ஒரு தனித்த சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளது. மற்றும் பல இடங்களில் உள்ள பல்வேறு அன்ஃபிபிய இனங்கள் உட்பட, பல அழிவுள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களைக் கொண்டுள்ளது.

தனித்துவமான நிலப்பகுதிகளில் குறிப்பாக, வெப்பமண்டல மழைக்காடுகள் மற்றும் மேகம் காடுகள் ஆகியவற்றில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, உலகின் 35  பல்லுயிர் பரப்பளவில் ஒன்றாக இலங்கையை கருதுவதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here