மதுபோதையில் பினாயிலை குடித்த யாழ் பொலிஸ்காரர் உயிரிழந்தார்!

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தா் ஒருவா் மலசலகூடத்தை சுத்த செய்ய பயன்படுத்தப்படும் பெனாயில் என்ற நச்சு திராவகத்தை குடித்ததால் உயிாிழந்துள்ளாா்.

ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு இன்று (13) உயிரிழந்துள்ளார்.

இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (12) இரவு யாழ்.நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், மலசலகூடத்தை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் பெனாயிலை குடித்துள்ளார்.

சக பொலிஸாரhல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றுக்காலை அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here