அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது: கடற்படையால் தாக்கப்பட்டனரா?

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 20 இந்திய மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 இந்திய மீனவர்களும், பூநகரி- கிராஞ்சி கடற்ப குதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் அனைவரும் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.

நெடுந்தீவில் கைதானவர்கள் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர், கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். இந்திய மீனவர்கள் சிலரின் உடலில் காயமிருந்தது. இலங்கை கடற்படையினர் தாக்கியதாலேயே தமக்கு காயம் ஏற்பட்டதாக மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

நாளை இவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here