பதவியை துறந்துவிட்டு பிரான்ஸ் பறந்த பிரதேசசபை உறுப்பினர்!

பிரான்சிற்கு சென்ற, வலி. வடக்குப் பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவர், தனது பிரதேசசபை பதவியை துறப்பதில் ஆட்சேபணை இல்லை என தேர்தல்கள் செயலகத்திற்கு அறிவித்துள்ளார்.

கோபிநாத் என்ற உறுப்பினரே சுகயீன விடுமுறை என அறிவித்துவிட்டு பிரான்சிற்கு சென்றுள்ளார். கடந்த நவம்பர் ஆரம்பத்தில் இலங்கையை விட்டு சென்றார். தற்போது, முறையான அனுமதியின்றி அவர் விடுமுறை பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைகிறது.

தொடர்ச்சியாக 3 மாதங்கள் சபைக்கு சமூகமளிக்காவிட்டால், அல்லது முறையான அனுமதி இன்றி வெளிநாட்டிற்கு பயணித்தால் உள்ளுராட்சி உறுப்பினர் ஒருவர் உறுப்புரிமை இழப்பார் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுயவிருப்பின் பேரில் தனது பதவியை துறப்பதாக தேர்தல்கள் திணைக்களத்திற்கு கோபிநாத் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் இவர் கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here