பெருந்தெருக்களை பராமரிக்க எரிபொருளில் கூடுதல் வரி: அமைச்சரவைக்கு யோசனை சமர்ப்பிக்கப்பட்டது!

நாட்டிலுள்ள பெருந்தெருக்களை பராமரிப்புக்கான நிதியம் ஒன்றை ஆரம்பித்து, எரிபொருள்களிற்கு விதிக்கப்படும் வரியின் மூலம் அதற்கான நிதியை பெற்றுக்கொள்ளும் திட்டவரைவை பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சு அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது.

வாகனங்களுக்கு நிரப்பப்படும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரு லீற்றருக்கு 50 சதம் வரி அறவிடுவதற்கு அந்தத் திட்டவரைவில் முன்மொழியப்பட்டுள்ளது.

வீதி முகாமைத்துவ நிதியம் ஒன்றை அமைத்து வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூர் அதிகார சபைகளுக்கு உள்பட்ட வீதிகளை பராமரிப்புக்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்வதற்கு இந்தத் திட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

“வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட வீதிகளைப் பராமரிப்பதற்கு ஆண்டு தோறும் 300 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனினும் வீதி அபிவிருத்திகளுக்கு செலவிடப்படும் நிதியில் இந்த ஒதுக்கீடு அரைவாசியாகும். அதனால் ஆண்டிறுதியில் ஏனைய அமைச்சுக்களிடம் நிதி கோரப்படுகிறது.

எனவே தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திட்டவரைவுக்கு அமைச்சரவை அனுமதியளித்து செயற்படுத்தப்பட்டால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆண்டுக்கு 50 பில்லியன் ரூபா நிதி கிடைக்கும். அந்த நிதி வீதிகளின் பராமரிப்புக்கு பயன்படுத்த முடியும்.

பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சும் பெற்றோலிய வளங்கள் அமைச்சும் தற்போது ஒன்றாக இருப்பதால், இந்த திட்டத்தை சுலபமாக முன்னெடுக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here