சுவிஸ் இளைஞர்கள் பாலியல் நோய் தாக்கத்திற்கு இலக்காக காரணம் இதுதான்!

சுவிற்சர்லாந்தில் ‘டேட்டிங்’ தளங்களால் இளைஞர்கள் பலர் பாலியல் நோய்களுக்கு இலக்காகுவதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சுவிற்சர்லாந்தில் பாலியல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் கொனெரியா என்ற பாலியல்நோயால் சுமார் 2,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த பல ஆண்டுகளை விடவும் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, கடந்த ஓராண்டில் மட்டும் ‘சிபிலிஸ்’ தொற்றால் சுமார் 11,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான முக்கிய காரணங்களாக கருதப்படுவது டேட்டிங் செயலிகள் எனவும் பாலியல் உறவு எளிதாக கிடைப்பதும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது.

இந்தச் செயலிகள் அறிமுகத்தால் இளைஞர்கள் பலர் பாலியல் துணைகளை தேடிக் கொள்வது நோய்கள் பாதிப்புக்கு காரணமாக அமைகின்றது.

சுவிற்சர்லாந்தில் நகர மக்களே இத்தகைய நோய்களுக்கு அதிகமாக இரையாகின்றனர். பெரும்பாலும் சூரிச், ஜெனிவா மற்றும் பேஸல் ஆகிய நகர்ப் பகுதிகளில் அதிகமாக இளைஞர்கள் பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here