அரசியலமைப்பை ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் எதிர்ப்பார்களாம்!

புதிய அரசியலமைப்பை எதிர்ப்பதென ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.

அரசியலமைப்பு யோசனையில் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது அதனை எதிர்ப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்துள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தின் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு வரைபு சமர்ப்பிக்கப்பட்டபோது, கணிசமான ஐ.தே.க எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்காததை சுட்டிக்காட்டிய மஹிந்த ராஜபக்ச, அவர்களின் நடவடிக்கை தமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here