ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்கியாள முடியாது; ஒரு பிரிவிற்கு மாத்திரம் உரிமை வழங்கவும் முடியாது: மஹிந்த!

ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்கி ஆள முடியாது. அதேபோல, இனமொன்றை பகைத்துக் கொண்டு ஒரு பிரிவினருக்கு மாத்திரம் உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும் முடியாது. அப்படி செய்தால் மக்களிடையே வைராக்கியமே உருவாகும் என தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச.

அரசியல் நிர்ணயசபையாக நாடாளுமன்றம் நேற்று கூடியது. இதன்போதுஅரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நிபுணர்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்பின்னர் நடந்த விவாதத்தில் உரையாற்றியபோதே, மஹிந்தராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

அரசியலமைப்பு தொடர்பாக ஆராய வாய்ப்பு கிடைக்க வேண்டும். இன்று காலையில் சமர்ப்பித்து, உடனடியாக அதைப்பற்றி கதைக்க முடியாது. இதை முன்டுக்கும் நாடாளுமன்றத்திற்கும் அரசாங்கமும் முறைமையில் தயாராக இருக்க வேண்டும். புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் சகலரும் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தோல்வியடைந்தனர். மக்களின் நிலைப்பாட்டை அறிவிக்க இயலாதிருக்கும் அவிற்கு மாகாணசபை தேர்தலும் நடக்காதிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிராகவும் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றுக்கொண்டுள்ளனர்.

(இன்போது ஆளுந்தரப்பு பக்கமிருந்த எம்.பியொருவர்- 19வது திருத்தத்தில் என்ன இருக்கிறது என தெரிந்தால், உயர்நீதிமன்ற தீர்ப்பு ஏன் வந்ததென புரியும் என கூச்சலிட்டார்)

நிதிமன்ற தீர்ப்பை முழுமையக படித்தால் 19வது திருத்தம் என்ன முட்டாள்தனமானது என்று கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும சட்டத்தை நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது முட்டாள் சட்டமாக இருந்தாலும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்போன்றுதான் இருக்கிறது.

அந்த நீதிமன்ற அறிக்கையை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.

(இத்போது குறுக்கிட்ட ஐ.தே.க எம்.பிக்கள், 19வது திருத்தம் கொண்டு வரப்பட்டபோது நீங்களும் அதை ஆதரித்தீர்கள்தானே என கேள்வியெழுப்பினர்)

நான் அப்போது அங்கிருக்கவில்லை. நீங்கள் நாடாளுமன்றத்தையும் ஏமாற்ற வேண்டாம். மக்களையும் ஏமாற்ற வேண்டாம். முதலில் உங்கள் கட்சியின் நிலைப்பாட்டை பெற்று, இதனைத்தான் நிறைவேற்றப் போகிறோம் என எங்களுக்கு கூறுங்கள். அப்படியில்லாமல், மக்களை ஏமாற்றி இதை  செய்ய வேண்டாம். நாடாளுமன்றத்திற்கு இந்த உரிமையும் கிடையாது.

ஒரு இனம், இன்னொரு இனத்தை மிதிப்பதற்கு இடமளிக்க முடியாது. சிங்கள இனமானது, வேறு இனத்தை மிதிப்பதற்கு உரிமை இல்லையென்பதுடன், அந்த இனத்திற்கும் மற்றைய இனங்களை மிதிக்கும் உரிமை கிடையாது. எவ்வாறாயினும், இரண்டு தரப்பினரும் இணைந்து கொண்டு வரும் இடத்திற்கு நாம் கொண்டு வர வேண்டும். அப்படி செய்யாமல், அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாது.

இனமொன்றை பகைத்துக் கொண்டு, ஒரு பிரிவினருக்கு மத்திரம் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முயன்றால் வைராக்கியமே உருவாகும். அந்த வைராக்கித்தை மக்களிடையே உருவாக்கிவிட வேண்டாமென்றே நாங்கள் கேட்கிறோம்.

(நீங்கள்தான் அப்படியான வைராக்கியத்தை உருவாக்குகிறீர்கள் என ஐ.தே.க எம்.பிக்கள் கூச்சலிட்டனர்)

அதனை நான் ஏற்படுத்தவில்லை. உங்களுடைய மனங்களிலேயே அது இருக்கிறது என்றார்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்தபோது,

“மஹிந்த ராஜபக்ச உரையாற்றியபோது, ஒர இனம் இன்னொரு இனத்தை மதிக்க இடமளிக்க முடியாது எனவும், ஒரு தரப்பின் உரிமைகளை மாத்திரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முடியாதெனவும், இதனை பொதுவான பணிகளாக முன்னெடுக்க வேண்டுமென்றார். இதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இனங்களிடையே வைராக்கியத்தை ஏற்படுத்த முடியாது. அவரின் யோசனைக்கமைவாக அரசியலமைப்பு சபையில் விவாதத்தை நடத்துவோம் என்றார்.

மீண்டும் கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ச-

இந்த நாடாளுமன்றத்தில் அதை செய்ய முடியாது. முறையாக அது இல்லாமையினால் அதனை செய்ய முடியாது. மக்களின் நிலைப்பாட்டிற்கு மதிப்பளியுங்கள். நீங்கள தேர்தலுக்கு வாருங்கள். எதிர்வரும் தேர்தலுக்கு ஐ.தே.கட்யினரால் அரசிலமைப்பு யோசனையை கொண்டு வரட்டும். நாங்கள் எங்களின் யோசனையை கொண்டு வருகிறோம். மக்களின் ஆணையை பெற்றுக்கொள்வோம். நீங்கள் நாட்டை பிளவுபடுத்தும் யோசனையை கொண்டு வாருங்கள். நாங்கள் நாட்ட பாதுகாக்கும் யோசனையை கொண்டு வருகிறோம்.

இந்த விடயத்தில் மக்களிற்கு சந்தர்ப்பம் வழங்குவோம். அரசாங்கத்தில் தற்போதுள்ள எம்.பிக்களின் எண்ணிக்கையை பாருங்கள். பெரும்பான்மை உங்களிடமே இருக்கிறது. இந்த நாடாளுமன்றத்தில் இதனை செய்ய வேண்டாம். நாடாளுமன்றதை கலைத்து தேர்தலுக்கு செல்லுங்கள். அங்கு மக்கள் எந்தப்பக்கம் தேவையென தீர்மானம் எடுக்கட்டும் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here