கதவடைப்பில் திறந்த வர்த்தக நிலையம் மீது தாக்குதல்: இருவர் கைது!

மட்டக்களப்பில் கர்த்தாலை முறியடிக்க திறந்த முஸ்லிம் கடை தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்திருந்த ஹோட்டல் முஸ்லிம் ஹோட்டல் இ்று கல்வீசி தாக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆளுராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அழைப்பு விடுக்கப்பட்ட கதவடைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்காத ஹோட்டலே தாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கதவடைப்பு கோரிக்கயை புறக்கணித்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட ஏனைய முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் உடனடியாக பூட்டப்பட்டன. இதால் மட்டக்களப்பு நகரம் வெறிச்சோடியது.

வர்த்தக நிலையம் தாக்கப்பட்டதையடுத்து, அதன் உரிமையாளரால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில், வர்த்தக நிலையத்தின் மீது கல்வீசி தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here