மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக ஏ.ஜே.எம். முசம்மில் நியமனம்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.

3 வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரம் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ​நேற்று இவர்களுக்கு இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here