இரா.சம்பந்தன்- கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில்-

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய இரா சம்பந்தன், சட்டத்திற்கும் நீதிக்கும்  முரணான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதனை ஆளுநர் அனுமதிக்க கூடாது என்றும்  முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனையுடனான முடிவுகள் எட்டப்படுவதானது தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் என்றும் தெரிவித்த அதேவேளை, அரச நிர்வாக நியமனங்கள் வழங்கப்படும்போது அனைத்து மக்களும் சமமாக நடாத்தப்படுத்தல் கடந்தகாலங்களில் கிழக்கு மாகாணத்தில் வாழும் பல்லின மக்களிடையே காணப்பட்ட இன விரிசல்களை இல்லாமல் செய்வதற்கு உதவும் எனவும் தெரிவித்தார்.

அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஆளுநரும் அவரது நிர்வாகமும் செயற்படவேண்டும் என இரா சம்பந்தன்  கேட்டுக்கொண்டார்“ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here