புனர்வாழ்வுற்குட்படுத்துவதாக கூறப்பட்ட தமிழ் அரசியல்கைதிக்கு ஐந்து வருடம் சிறைத்தண்டனை!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்கைதி ஒருவரிற்கு இன்று நீதிமன்றம் ஐந்து வருடம் சிறைத்தண்டனையளித்து தீர்ப்பளித்தது.

சில மாதங்களின் முன்னர் அநுராதபுரத்தில் அரசியல்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமயத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேச்சு நடத்தியபோது, புனர்வாழ்விற்குட்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த இராசதுரை ஜெகன் (யாழ்ப்பாணம்) என்ற அரசியல்கைதிக்கே இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.

அநுராதபுரத்தில் அன்டனோவ் ரக விமானத்தை ஏவுகணையால் சுட்டு விழுத்தினார், அதில் பயணம் செய்த 37 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தார் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அரசியல் தீர்மானத்தை அவர் எதிர்நோக்கியிருந்தார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, சட்டமா அதிபர் திணைக்களத்துடன் நடத்திய பேச்சில், உடனடியாக புனர்வாழ்விற்குட்படுத்தப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குறிப்பிடப்பட்ட இருவரில் இராசதுரை ஜெகனும் ஒருவர்.

எனினும், அதன்பின் தனது விடுதலை தொடர்பான விவகாரத்தில் எந்த அரசியல் தலைவர்களும் அக்கறை செலுத்தவில்லையென அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here