விக்னேஸ்வரன் என்ன கூறினாலும் வடக்கு மக்கள் இராணுவத்துடனே இருக்கிறார்கள்: கருணா!

வடக்கு மக்கள் இராணுவத்தினருக்கு மிகவும் மரியாதையும், நன்றியுமுடையவர்களாக இருக்கிறார்கள் என கூறியுள்ளார் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்). இதனால் வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றும் கோரிக்கைக்கு அவர்கள் எதிராக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்பதில் இராணுவம் பெரும் பணியாற்றியது. இடம்பெயர்ந்தவர்களிற்கு உதவுவதிலும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.

இராணுவத்தினர் நாட்டை காப்பாற்றியவர்கள். அவர்கள் போர் வெற்றி வீரர்கள். அவர்கள் தமிழ் மக்களிற்கு எதிராக போராடவில்லை, பயங்கரவாதத்திற்கு எதிராகவே போராடினார்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். விக்னேஸ்வரனின் விமர்சனங்களை மீறி, வடக்கு மக்களின் உண்மையான காவலன் யாரென்பது வடக்கு மக்களிற்கு நன்றாக தெரியும்.

இராணுவத்தின் மீது மக்களிற்கு பெரும் நம்பிக்கையிருப்பதால், இராணுவ முகாம்களை வடக்கிலிருந்து அகற்றுவதற்கு எதிராக இருக்கிறார்கள். ஆனால், விக்னேஸ்வரன் தொடர்ந்தும் இனத்துவேச அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அரசாங்கமும் அதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. சாதாரண ஒருவர் இப்படியான அறிக்கைகளை வெளியிட்டால், இப்போது சிறைக்குள்தான் இருந்திருப்பார் என்றும் கூறியுள்ளார்.

 

செய்கிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here