துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான யானைக்கு தீவிர சிகிச்சை!

இனம்தெரியாதவர்களின் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட யானையொன்றிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள். மெதிரிகிரிய வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது

தியசேனபுர, இலுக்பிட்டிய கிராமத்தில் இந்த யானை காயத்துடன் வீழ்ந்து கிடப்பதை கிராம மக்கள் அவதானித்து, வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்தனர்.

15 வயதுடையதாக மதிப்படப்படும், 8 அடி உயரமுடைய யானை இது.

படுகாயமடைந்த நிலையில் உள்ள யானைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

யானையை சுட்ட துப்பாக்கிதாரியை பொலிசார் தேடி வருகிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here