ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் நியமனத்திற்கு எதிர்ப்பு: நாளை நிர்வாக முடக்கத்திற்கு அழைப்பு!

கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (11) முழுமையான முடக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது கிழக்கு மக்கள் ஒன்றியம்.

கிழக்கு மாகாணத்தின் சுமுக நிலைமையையும், பாரம்பரியத்தையும் சிதைக்கும் நோக்கம் கொண்ட புதிய ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி, வாகனங்கள் ஓடாமலும்- கடைகள், அரச அலுவலகங்கள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களை பூட்டியும் நிர்வாக முடக்கத்தில் ஈடுபடுமாறும், கிழக்கு மாகாண மக்களின் அமைதியை பாதுகாக்க மூன்று மாவட்ட மக்களும் தமது எதிர்ப்பை வெளியிடுமாறும் அழைப்பு விடுக்கிறோம் என அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here