கணவனால் அடிக்கடி வல்லுறவு… பெற்ற மகள் எப்படி கொல்லப்பட்டார்?: தயார் அதிர்ச்சி வாக்குமூலம்!

பெற்ற மகளையே கொன்று புதைத்த விவகாரத்தில் தாயையும், அவரது கணவரையும் பொலிசார் கைது செய்திருந்ததையும், நேற்று (09) சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதையும் தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் 9 வயது சிறுமியான டிலானி என்ற சிறுமியே கொல்லப்பட்டார். பதுளை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

சிறுமியின் தாயான ஜனாகி (வயது 26), அவரது கணவனான மகேந்திரன் (வயது 30) ஆகியோர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தயார் ஜானகியிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், நடந்த சம்பவங்கள் தொடர்பாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

வவுனியா, செட்டிக்குளத்தில் வசித்தபோது, ஒன்றுவிட்ட உறவினர் ஒருவருடன் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து, செட்டிக்குளத்தைவிட்டு, மஹதென்ன பகுதிக்கு வந்து வாழ்ந்திருக்கிறார். அப்போது மகேந்திரம் என்பவருடன் உறவேற்பட்டு திருமணம் முடித்தார்.

2009 டிசம்பர் 10ம் திகதி டிலானி பிறந்தார். மகேந்திரனுடனான திருமண உறவில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

மகேந்திரனால் பலமுறை துன்புறுத்தப்பட்டதுடன், பாலியல் வல்லுறவிற்கும்  டிலானி ஆளாகியிருக்கிறார். 2018 ஜனவரி 5ம் திகதி, ஜானகி வீட்டில் இல்லாத சமயத்தில் டிலானி கொல்லப்பட்டுள்ளார். வெளியே சென்று வந்த ஜானகி, சமையலறைக்குள் டிலானி இறந்து கிடந்ததை கண்டு, மகேந்திரனிடம் அது குறித்து வினவியிருக்கிறார். கழுத்தை நெரித்து கொன்றுவிட்டதாக, மகேந்திரன் கூறியிருக்கிறார்.

அத்துடன், இந்த விடயத்தை வெளியில் சொல்ல வேண்டாம், யாருக்கும் தெரியாமல் புதைத்து விடலாம், வெளியில் விசயம் தெரிந்தால் எல்லோரும் சிறைக்கு போக வேண்டி வருமென கூறியுள்ளார். மகேந்திரனின் தாயாரும் இதையே கூறியிருக்கிறார்.

இதற்கு ஜானகி இணங்கியதையடுத்து, வீட்டு தோட்டத்தில் சிறுமி டிலானியின் உடல் புதைக்கப்பட்டது.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளதாக பதுளை பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஜானகி, மகேந்திரன், மகேந்திரனின் தாயார் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here