விஸ்வாசத்தை விட பேட்ட பத்து மடங்கு வசூல்!

2019ம் வருடத்தின் முதல் பெரிய போட்டியாக ஒரே நாளில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட, அஜித் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய படங்கள் இன்று(10) வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் இந்தப் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்பது நாளை(11) தான் தெரிய வரும். அதற்கு முன்பாக அமெரிக்காவில் நேற்று இரவு நடைபெற்ற பிரிமியர் காட்சிகளின் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

விஸ்வாசம் படம் 97 இடங்களில் மொத்தமாக 57,195 யுஎஸ் டொலர்கள் வசூலித்துள்ளது. சராசரியாக ஒரு இடத்திற்கு 590 டொலர் வசூல். பேட்ட படம் 259 இடங்களில் 5,57,387 யுஎஸ் டொலர்கள் வசூலித்துள்ளது. ஒரு இடத்திற்கு சராசரி வசூல் 2152 யுஎஸ் டொலர்.

பேட்ட படத்தின் வசூல் விஸ்வாசம் படத்தின் வசூலை விட 10 மடங்கு அதிகம்.

பேட்ட படத்தின் பிரிமியர் வசூல் தெலுங்குப் படமான என்டிஆர் கதாநாயகடு படத்தை விட வசூல் அதிகம். என்டிஆர் படம் 8ம் திகதி நடைபெற்ற பிரிமியர் காட்சிகளில் 4,73,404 யுஎஸ் டொலர்களை 155 இடங்களில் வசூலித்துள்ளது. சராசரியாக ஒரு இடத்திற்கு 3054 யுஎஸ் டொலர்.

பேட்ட என்டிஆர் படங்கள் இந்த வாரத்திற்குள்ளாகவே 10 லட்சம் யுஎஸ் டொலர் வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here