சிறுவனிற்கு ஊசி மருந்து மாற்றி ஏற்றப்பட்டது; அலட்சியமாக இருக்கும் நிர்வாகம்: மன்னார் வைத்தியசாலையில் தொடரும் ‘பீதி’ சம்பவங்கள்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற சிறுவனிற்கு ஊசி மருந்து மாற்றி ஏற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மூடி மறைக்க வைத்தியசாலை நிர்வாகம் முயற்சிப்பதாக சிறுவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது.

அன்றைய தினம், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றான். சிறுவனிற்கு ஊசி மருந்து ஏற்றப்பட்டது. தனது மகனிற்கு ஏன் ஊசி மருந்து ஏற்றப்பட்டது என தந்தையார் விசாரிக்க, அது தவறுதலாக ஏற்றப்பட்டதாகவும், மன்னித்துக் கொள்ளும்படியும் வைத்தியாசாலை நிர்வாக தரப்பால் கூறப்பட்டுள்ளது.

தவறுதலாக ஊசி மருந்து ஏற்றப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறான்.

வேறு ஒருவருக்கு ஏற்றப்படவிருந்த ஊசி மருந்தை, சிறுவனிற்கு ஏற்றிவிட்டதாக வைத்தியர்கள் சமாதானம் செய்ததாக, சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது, வைத்தியசாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில மாதங்களாகவே மன்னார் வைத்தியசாலை மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here